
#ஆண்களின் அழகு..
புன்னகைக்கும் போதும், புன்னகைக்க வைக்கும் போதும்.
தன் மனைவிக்கு மல்லிகை பூ
வைக்கும் போது.
வெட்கப்படும் போதும், வெட்கப்பட வைக்கும் போதும்…
பொய்ச்சொல்லி மாட்டிக்கொள்ளும் போதும், பொய்யைக் கண்டுப்பிடிக்கும் போதும்…
உரிமைக் கொள்ளும் போதும், உரிமைக்காக ஏங்கும் போதும்…
கோபப்படும் போதும், சமாதானம் செய்யும் போதும்…
பிடிவாதம் பிடிக்கும் போதும், பிடித்ததை செய்யும் போதும்…
ஆசையை வெளிக்காட்ட தயங்கும் போதும், ஆசையை நிறைவேற்றும் போதும்…
பொறாமைப்படும் போதும், பொறாமைப்பட வைக்கும் போதும்…
பேசாமல் இருக்கும் போதும், பேச வைக்கும் போதும்…
காதலிக்கும் போதும், அதை சொல்ல தயங்கும் போதும்…
அன்பு காட்டும் போதும், அக்கறைக் கொள்ளும் போதும்…
தனக்கானவளை நேசிக்கும் போதும், அவளுக்காக தன்னை மாற்றிக்கொள்ளும் போதும்…
தன் குழந்தையை ஏந்தும் போதும், தன் பெற்றோர்களை தாங்கும் போதும்…
தலையை கோதும் போதும், மீசையை முறுக்கும் போதும்…
இன்னும்…இன்னும்…போதும்கள் பல உள்ளன…
போதும் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆண்கள் மிகவும் அழகானவர்கள் ..
பொதுவாகவே ஆண்களுக்கு பரந்த மனது♥️
ஆண்களுக்கு பார்ப்பதற்கு முரடானவர்கள் போல இருப்பார்கள் .
பழகிவிட்டால் குழந்தையின் மனதை விட
இளகி மனம் உள்ளவர்கள்….