தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகளை இவர்கள் சந்திக்க நேரிடைகிறது.
இதில் முக்கியமான ஒன்றான பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை இவர்கள் சந்திக்கின்றனர். சில உணவுகள் பல்லுக்கு ஏற்றதாக அமைவதில்லை. அதனால் இந்த பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனையை போக்க இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
புளிப்பு ,இனிப்பு, குளிர்ச்சி மற்றும் சூடான பொருள்களை உண்ணும் போது பல் கூச்சம் ஏற்படுகிறது. இந்த பல் கூச்சத்தை போக்குவதற்கு காலை மற்றும் இரவு நேரங்களில் திரிபலா சூரணம் அதாவது கடுக்காய், நெல்லிக்காய் ,தான்றிக்காய் உள்ளிட்டவற்றை எடுத்து பவுடராக செய்து அதில் பல் துலக்கி வர வேண்டும். இதன் மூலம் பல் கூச்சம் குறைகிறது.
அதுமட்டுமின்றி பல்லில் சொத்தை ஏற்பட்டு குழி விழுந்து வலியுடன் வீக்கம் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன்பு மஞ்சள் தூளை சொத்தை துவாரத்தில் வைத்து காலையில் கழுவி வர வேண்டும், இதன் மூலம் வலியும் வீக்கமும் குணமடையும். மேலும் வேப்பிலையை நன்றாக சுத்தம் செய்து நல்ல தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக எடுத்து தினந்தோறும் இரவு நேரத்தில் வாய் கொப்பளித்து வருவதால் பல் வலி வராது பல் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமடையும்.