Oplus_131072
பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை!?
1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்…
மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் #தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா?
2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்…
மனைவி : உங்களுக்கு #தூக்கமேவராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க!
3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்…
மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு
டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், #இங்கேயேஉக்காந்து கிட்டு… சும்மா… . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது!
4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித் திரிந்தால்…
மனைவி : இவ்வளவு நேரம் #எங்கபோனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப
கிடையாதே? இப்போவும் வீட்டிலே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல …..!
5. ஓய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்…
மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள் தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க…. . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் ” #ராம்ராம்”, சங்கரா சங்கரா…. மாலை, மணி—அதே வேலை தானா!
6.ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்…
மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக #காத்திருக்கனுமா நாங்க?
7.ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்…
மனைவி : பக்கத்து வீட்டு மோகனப் பாருங்க…. ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, #டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்கோ, எப்பவும் என்னை மருதமலைக்குத் தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க!
8.ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்…
மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டிக் கிடக்குதோ? அந்தப் பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்… , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்….
9.ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்…
மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ…. ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க!
10.ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்துப் பேசினால்…
மனைவி :
எப்பவும் #மொபைலும் கையுமா…… தான் பேச்சுப் பேச்சு…. ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்!
11.ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் …
மனைவி :
இந்த வயசில அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில் மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா?
ஆஹா! ஓய்வு பெற்ற வாழ்க்கை!
எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்கும்
அன்பான அர்ப்பணிப்பு
உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் அனுபவங்கள் தான்!




