கடன் தொல்லை காரணமாக அரங்கேறியது தற்கொலை..!!

இன்றைய காலத்தில் பலரும் கடன் தொல்லை தாங்காமல் மன உளைச்சலில் ஆளாகி தற்கொலை செய்து கொள்வதே சிறந்த தீர்வு என்று தற்கொலை செய்து கொள்கின்றனர், அண்மையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு தற்கொலை அரங்கேறியது கடன் தொல்லை தாங்காமல் குடும்பத்துடன் விஷம் குடித்த தம்பதிகள் மற்றும் மகன் சுற்று வட்டாரத்தையே கதி கலங்க வைத்தது கண்ணீரோடு சுற்றம் சூழ்ந்தது..

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் கிருஷ்ணாம்பால் மற்றும் இவர்களின் மகன் சிவக்குமார், இவர்கள் மூவரும் நேற்று செப்டம்பர் 1 இரவு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தற்கொலை செய்யப்பட்ட தம்பதிகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் தேனியைச் சேர்ந்த இவர்கள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது, மேலும் விசாரணைகள் நடந்து வருகிறது..!!

Read Previous

தன் மனைவியை பலரின் தூண்டுதலோடு சீரழித்த கணவர்..!!

Read Next

சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular