
கண் கட்டியை உடனே சரி செய்ய எளிதான வீட்டு மருந்து குறிப்புகள்..!! படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
ஒரு சில காலங்களில் ஒரு சில நோய்கள் மனிதர்களுக்கு வரும். குறிப்பாக மழைக்காலங்களில் சளி ஜலதோஷம். குளிர்காலங்களில் காய்ச்சல். வெயில் காலங்களில் வயிற்று வலி போன்றவைகள் வரும். அதே மாதிரி தான் வெயில் காலங்களில் தான் அதிக அளவில் அனைவருக்கும் கண்கட்டி வரும். இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தான் இதற்கு காரணம். கண்கட்டிக்கு இயற்கையான முறையில் வீட்டு வைத்தியம் என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
கண்ணின் இமை அல்லது கீழ்பகுதியில் வரும் கண்கட்டி கண்ணில் வலியையும் மற்றும் உறுத்தலையும் அதிக அளவில் உண்டாக்கும். கண் கட்டி வந்தால் ராம கட்டி அந்த இடத்தில் போட்டால் சரியாகிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அகத்திக் கீரையை அரைத்து தலையின் உச்சியில் ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்தால் உடல் சூடு குறையும் இதனால் கண்கட்டி வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி பாலாடையை எடுத்து கண்கட்டி உள்ள இடத்தில் தடவுவதன் மூலம் கண் கட்டி காணாமல் போகும்.