கருஞ்சீரகம்- யார் சாப்பிடவே கூடாது ?
புற்றுநோய்க்கு கூட கருஞ்சீரகத்தில் இருந்துதான் மருந்து தயாரிக்கிறார்கள் ஆனால் 98% நன்மைகள் இருந்தாலும் மீதமுள்ள 2 சதவீதம் தீமைகள் ஆக இருந்து வருகின்றது.
1.கருஞ்சீரகத்தின் மருத்துவ குணத்திற்காக தினமும் சாப்பிட்டு வருபவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் வரை தான் சாப்பிட வேண்டும் அதன் பிறகு சாப்பிடக் கூடாது.
2. கர்ப்பிணி பெண்கள் கருஞ்சீரகத்தை அறவே சாப்பிடக் கூடாது. எனவே குழந்தைக்காக காத்திருப்பவர்கள் கூட கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது.
3. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவரும் அம்மாக்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது. குழந்தை பெற்றவுடன் அவர்களுக்கு கருஞ்சீரகம் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது ஒரு முறை மட்டும் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் பிரச்சனை ஒன்றுமில்லை.
4. தாழ்வு ரத்த அழுத்தம் (லோ பிரசர்)உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது.
5. குறைந்த சர்க்கரை சத்து உள்ளவர்களும் கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது. ஆனால் அதிக சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் ஒரு மண்டலம் வரை கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் போதும்.




