நம் அனைவரின் வீடுகளிலும் காய்ந்த மிளகாய் என்பது நிச்சயமாக இருக்கும். இந்த காய்ந்த மிளகாய் இல்லாமல் சமையல் எப்போதும் முடிவு பெறாது. இந்த காய்ந்த மிளகாய் தாளிக்க பயன்படுத்தினாலும் சரி சட்னிக்கு பயன்படுத்தினாலும் சரி அல்லது பொடியாக பயன்படுத்தினாலும் சரி இதை உபயோகிக்காமல் நம்மால் இருக்க முடியாது.
இந்த காய்ந்த மிளகாய் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயை நம்மால் விரட்டி அடிக்க முடியும். ஆனால் இந்த காய்ந்த மிளகாய் பார்க்க மஞ்சள் கலந்த நிறத்தில் காணப்பட்டால் புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காய்ந்த மிளகாய் அங்கங்கே அல்லது ஒரு இடத்தில் மஞ்சள் நிறம் தென்பட்டால் அதனை உபயோகிக்க கூடாது. இதில் இருக்கும் அஃப்லா டாக்ஸின் என்னும் வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் சமையலில் காய்ந்த மிளகாயை சேர்க்கும்போது மஞ்சள் தன்மையுடன் இருந்தால் அதனை ஒதுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.




