தினமும் நாம் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களில் பல் துலக்குவது அடிப்படையான ஒன்றாக உள்ளது ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் பெட் காஃபி என்ற பெயரில் காபி மற்றும் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு இது நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்…
பல் துலக்காமல் எந்த ஒரு உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது எதையும் குடிக்க கூடாது என்று கருத்தும் நிலவி வருகிறது இந்த நிலையில் காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது, பொதுவாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர் அதேபோல் காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதாக சொல்லுகிறது அறிவியல்..
பல் துலக்காமல் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் :
* உடலில் உள்ள பலவகையான நோய்களை தீர்க்க உதவுகிறது
* உடல் பருமன் சர்க்கரை நோய் உயர் இரத்த அழுத்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் தினமும் வெதுவெதுப்பான நீரை அருந்துவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
* பல் சொத்தை தடுக்க உதவுகிறது
* உடலின் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பருவகால நோய்க்கான சளி இருமல் காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது
* பளபளப்பான சருமம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது அதோடு முடியை பளபளப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது
* சிறுநீரகத்தை சுத்தப்படுத்தவும் அதன் திறனை மேம்படுத்தும் முடிகிறது சிறுநீரக கற்களை கரைக்கு உதவுகிறது
* கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது..!!