குதிரைவாலி அரிசியில் அடங்கியுள்ள சத்துக்கள், பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

குதிரைவாலி புற்கள் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிராகும். குதிரைவாலிக்கு புல்லுச்சாமை என்ற பெயரும் உண்டு. குதிரைவாலி ஆங்கிலத்தில் Horse-tail  Millet, Barnyard Millet என்று அழைக்கபடுகிறது.
 
குதிரைவாலி மற்ற சிறுதானிய வகைகளை விட அளவில் மிகமிகச் சிறியது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கு ஏற்ற மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலியாகும். இது கால்சியம்மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும்.
 

குதிரைவாலி வரலாறு

குதிரைவாலி இந்தியாபாகிஸ்தான்நேபாளம் போன்ற நாடுகளில் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பயிரிடபட்டு வருகின்றது. ஆனால் முதன் முதலில் இது எங்கு பயிரிடப்பட்டது என்று தெரியவில்லை. நெல் போன்ற பயிர்கள் விளையாத நிலங்களில் இவை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
 

குதிரைவாலியில் அடங்கியுள்ள சத்துக்கள்

குதிரைவாலியில் நார்ச்சத்துமாவுச்சத்துகொழுப்புச்சத்துசுண்ணாம்புச்சத்துபாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின்மாவுச்சத்துகால்சியம்பி-கரோட்டின்தயமின்ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன. இதில் மாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்தும் அதிகமாக காணப்படுகிறது.
 
100 கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2 கிகொழுப்பு சத்து 2.2 கிதாது உப்புகள் 4.4 கிநார்ச்சத்து 9.8 கிமாவுச்சத்து 65.5 கிகால்சியம் 11 மி.கிபாஸ்பரஸ் 280 மி.கி அடங்கியுள்ளது.

குதிரைவாலியின் மருத்துவ பயன்கள்

1. குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
2. செரிமான பிரச்சனைகள்ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்துகிறது.
3. இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும்.
4. கண் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
5. இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
 
6. ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது  உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுப்பதிலும்கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது.
 
7. செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
 
8. உடலில் கபம் அதிகமாகி அதனால் அடிக்கடி சளிகாய்ச்சலால் அவதிப்படுவார்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளிகாய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
 
9. குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்  உண்டு.
 
10. உடல் உறுப்புகளைத் தூய்மையாக்கும், மேலும் நல்ல ஆண்டி ஆக்சிடன்டாகவும் செயல்படுகிறது.

Read Previous

மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற கணவர்..!! போலீசார் விசாரணை..!!

Read Next

Restaurant Style முட்டை குழம்பு வேண்டுமா?.. இப்படி செய்து அசத்துங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular