தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தனது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




