தாம் நிதி உதவி வழங்கியதாக கடவுள் சிவன் புகைப்படத்தில் முன்பு பொய் கூறிய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் நாட்டு மக்களிடமும், அஜய் சிங் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னி வீரர் அஜய் சிங்குக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் .இந்த விவகாரம் தொடர்பாக வீரமரணம் அடைந்த வீரரின் தந்தை உண்மை நிலையை கூறும் வீடியோ எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் .
அதில் ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னி வீரருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் கூறியுள்ளார். கடவுள் சிவனின் புகைப்படம் முன்பு ராஜ்நாத் சிங் பொய் பேசி உள்ளார். ராணுவத்தில் வீர மரணம் அடைந்ததை அஜய் சிங்கின் தந்தை ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலபடுத்தியுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும் அஜய் சிங் குடும்பத்தினரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.