
செவ்வாழை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று தெரியுமா..??
காலையில் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட அது குடலை தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும் ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சிகள் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். தோளில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும்.
சிறுநீரக கற்கள் உருவாவது மற்றும் இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலை இந்த செவ்வாழை தடுக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எடையை குறைக்க நினைப்போருக்கு செவ்வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கும். ரத்த அணுக்களின் அளவை சீராக்கவும் பராமரிக்கவும் இது அதிகமாக உதவுகிறது. மேலும் தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம்.