தமிழக்தில் உள்ள டெல்டா மாவட்டங்களான திருநெல்வேலி , திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாருர், பெரம்பலூர் மற்றும் கடலூர் முதலிய பகுதிகளில் ரூபாய் 1,170 கோடி மதிப்பிலான புதிய பிரமாண்டமான வேளாண் வழித்தடம் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேளாண் வழித்தடம்:
டெல்டா மாவட்டங்களில் அமைக்கப்படும் இத்திட்டத்தின் பணியை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்துறை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் , இந்நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்குவதாகவும், தொழிற் பூங்கா அமைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இதர வசதிகளாக குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாலை கட்டமைப்புகள் மேற்கொள்ள போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை வழிநடத்தி செல்ல தமிழக வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு மற்றும் உணவு பாதுகாப்பு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.




