கொடைக்கானல் சின்னூர் மலைப்பகுதியில் உடல் நிலை குறைவால் படுத்த படுக்கையாய் இருந்த பெண்ணை டோலி கட்டி தூக்கிச் செல்லும் போது வழியிலேயே உயிர் இழந்துள்ளார்.
கொடைக்கானல் சின்னூர் காலனி மலைப்பகுதியை சேர்ந்த மாரியம்மாள் கடந்த 10 நாட்களாக உடல்நிலை குறைவால் படுத்திருந்தார், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் அத்தியாவசிய தேவைக்கு கூட பயணம் செய்ய முடியாத நிலையில் இருந்தது, தற்போது மழை குறைந்துள்ளதால் இளைஞர்கள் அந்தப் பெண்ணை டோலி கட்டி 5 கிலோமீட்டர் தூக்கிச் சென்றுள்ளார், மருத்துவ மனையில் சிகிச்சையின்றி உயிர் இழந்துள்ளார், இதனால் சினானார் கிராம மக்கள் தங்களின் போக்குவரத்து சிரமங்களையும் இதனால் ஒரு பெண்ணின் உயிரிழப்பையும் பற்றி வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்..!!