
ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தில் எவ்வித கஷ்டமும் இல்லாமல் சமாளிக்க பணத்தை சேமிப்பது என்பது கட்டாயம். அத்தகைய பெற்றோர்களின் பாரத்தை குறைப்பதற்காகவும் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ஒரு புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது தபால் அலுவலகத்தில் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக “பால் ஜீவன் பீமா யோஜனா” என்ற திட்டத்தின் படி தினமும் 6 ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தினை குழந்தைகளின் பெயரில் அவர்களின் பெற்றோர்கள் மட்டுமே தொடங்க முடியும், மேலும் பெற்றோர்களின் வயது 45 க்குள் இருக்க வேண்டும் மற்றும் குழந்தைகளின் வயதும் 5 முதல் 20 க்குள் இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து இத்திட்டத்தில் தினமும் 6 முதல் 18 ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இத்தகைய சேமிப்பினால் அவர்களின் எதிர்காலத்தில் இந்த பணம் ஒரு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.