தினமும் அரை டீஸ்பூன் மட்டும் போதும்..!! உடலில் உள்ள பல வியாதிகளை சரி செய்யும் வெந்தயம்..!!

உங்க வீட்டுல ஆகச் சிறந்த தானியம் இதுதான்; தினமும் அரை ஸ்பூன் போதும்: வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் வைங்க!

நரம்புகளைப் பலப்படுத்தக் கூடியது. சீதபேதி, பைல்ஸ் எனப்படும் மூலநோய், உடல் சூடு, நீர்க்கடுப்பு போன்ற பல பிரச்னைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது.

வெந்தயத்தைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதன் கசப்புச் சுவை நம்மில் சிலரை, பொதுவாகக் குழந்தைகளை முகம் சுளிக்கச் செய்யும்.
வறுத்துப் பயன்படுத்தும்போது இதன் கசப்பு குறையும். உணவின் சுவையும் கூடும். வெந்தயம், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தச்சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது. பசியைத் தூண்டக்கூடியது.

நரம்புகளைப் பலப்படுத்தக் கூடியது. சீதபேதி, பைல்ஸ் எனப்படும் மூலநோய், உடல் சூடு, நீர்க்கடுப்பு போன்ற பல பிரச்னைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது. இந்த வெந்தயத்தை பயன்படுத்துவது நவனல்லது. வெந்தயத்தை அரைத்து பொடி செய்து வீட்டில் வைத்துவிடுங்கள். நாம் பயன்படுத்தும் தானியங்களில் வெந்தயம் மட்டும்தான் ஆக சிறந்த உணவாக இருக்கிறது. இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து என இரு சத்துக்களுமே இருக்கிறது.

கரையும் நார்ச்சத்து இதயத்தில் மாரடைப்பு வராமல் தடுக்கும். கரையாத நார்ச்த்து மலத்தை வெளியேற்றும். பல சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல் பெரிய பிரச்னையாக இருக்கிறது. உடலில் ஃபைபர் சத்து இல்லாதததால் இந்த மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது. தினமும் வெந்தயம் 10 கிராம் எடுத்தால், கசப்பும் கிடைக்கும். மலமும் வெளியேறும்.

Read Previous

நாம் பெற்ற அனைத்திற்கும் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

தலைமுடி உதிர்வை தடுக்க இந்த மூன்று வழிகளை மட்டும் பின்பற்றுங்கள் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular