பொதுவாகவே ஐப்பசி மாதம் பிறந்து விட்டால் ஆறு முகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதி என்று அழைக்கப்படுகிறது. சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும்.
சஷ்டி திதி நாளன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் திருமண வாய்ப்பு கைகூடும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இந்த விரதத்தினை மேற்கொள்வதன் மூலம் குழந்தை பேரு கிடைக்கும்.
சஷ்டி திதி பரிகாரத்திற்கு தேவையானவை நெல்லிக்காய் ,நெய் தேய்பிறை சஷ்டியில் எப்பொழுதும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து முருகப்பெருமானுக்கு சந்தனம் குங்குமம் வைத்து நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு நடுவில் குழி செய்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். இது போல் இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடுவதன் மூலம் அஷ்ட லட்சுமிகளின் கடாட்சம் வீட்டில் உண்டாகும்.
வீட்டில் பண தட்டுப்பாடு எப்பொழுதுமே ஏற்படாது. பௌர்ணமி நாளிலிருந்து ஆறாவது நாள் சஷ்டி திதி, தேய்பிறை சஷ்டி விரதம் கடைபிடித்தவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி முருகப்பெருமானின் படத்திற்கு மாலை அணிவித்து தீபாரதணை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். காலையில் பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தால் பணம் பிரச்சனைகள் மற்றும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும். இந்தநாள் முழுவதும் உபதேசம் இருந்து முருகப்பெருமானை மாலையில் வணங்கி பின் விரதத்தை முடிவு செய்ய வேண்டும்.