வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான்.
மேலும் அதை தடுக்க தினமும் நாம் சில செயல்களை செய்து வந்தால் உடல் எடை குறைவதோடு வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.
தொப்பையை குறைக்க செய்ய வேண்டியவை:
- தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி வயிற்றைச் சுற்றி காணப்படும் தொப்பையும் குறைந்துவிடும்.
- உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால் உடலில் தண்ணீரானது வெளியேறாமல் அதிகமாக தங்கிவிடும்.
- உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால் தொப்பையை குறைவதோடு உடல் எடையும் குறையும்.
- தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
- நட்ஸில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
- சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும்.
- தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால் எடை குறைவதோடு தொப்பையும் குறைக்கும்.
- வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.
- தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.