நடிகர் விஜய் தனது கட்சி கொடியினை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டதை தொடர்ந்து தனது கட்சிக்கான மாநாட்டினை நடத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது..
தமிழக வெற்றி கழக கட்சியின் மாநாட்டை நடிகர் மற்றும் அரசியல் தவெக தலைவர் விஜய் அவர்கள் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22ஆம் தேதி நடத்த அனுமதி கோரி இன்று கடிதம் வழங்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் எஸ் பி அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது, அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் மாநாடுகளுக்கு தேவையான பந்தல்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் விரைவில் தொடங்கப்படும் என தமிழக வெற்றிக்கழக கட்சியின் அதிகாரிகள் தெரிவித்தனர், அடுத்த ஆட்சி அமைப்பின் தமிழக வெற்றி கழகம் தனது ஆட்சியை வெற்றிகரமாக அமைத்து மக்களுக்கு சேவை செய்வது மட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்தையும் தமிழக வெற்றி கலகம் செய்யும் என்று தொண்டர்கள் உறுதியளித்தனர்..!!