நாமக்கல் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு மோகனூர் ரோட்டில் உள்ள நாமக்கல் தலைமை மருத்துவமனையானது இட வசதியின் பற்றாக்குறைவு காரணத்தினால் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால் மக்களிடையே பெரும் அவதியும் பாதிப்பும் நிலவியதை கண்டித்து, நாமக்கல் மாவட்ட நகர்ப்புற வாசிகள் அடிக்கடி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை முன் வைத்தனர் இருந்தும் மாற்றம் செய்வது மீண்டும் இயலாத செயல் என்று கூறியதை கண்டித்து.
நாமக்கல் நகர்புறவாசிகள் மீண்டும் பழைய அரசு தாலுகா மருத்துவமனையை செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்காக உண்ணாவிரதம் இருக்க 200 பேர்கள் ஈடுபட முயற்சித்தபோது நாமக்கல் காவல் நிலைய உயர் அதிகாரிகள் அவர்களை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பேசினார்கள்..