
நீட் தேர்வு குறித்து பல கட்சிகளின் தலைவர்கள் பலவிதமாக பேசி சர்ச்சையில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில், நீட் தேர்வுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வினால் அரசு அரசு பள்ளி மாணவர்கள் பலர் பயனடைகின்றனர். இந்நிலையில், பாஜக மாநில தலைவரான அண்ணாமலை அவர்கள் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளில் நீட் தேர்வினால் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் கூறுகிறார். அதேபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வு குறித்து பல சர்ச்சைகள் எழும்பினாலும் நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் பலர் பயனடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.