இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை என்பது ஆரோக்கியமற்றவர்களுக்கு ஆரோக்கியமான உணவு முறைகளை தருவதே ஆகும், அப்படி இருக்கும் பட்சத்தில் முதலில் ஆரோக்கியமான உணவாக மருத்துவர்கள் சொல்ல இருப்பது தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்பதே..
முட்டையில் கிடைக்கக்கூடிய சத்துக்கள் ஏராளம், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன ஒரு முட்டையின் வெள்ளை கருவில் 17 கிராம் கலோரியும் மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது, மேலும் ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டின் உள்ளது இதில் வெள்ளை கருவில் 3.5 கிராம் புரோட்டின்னும் மஞ்சள் கருவில் 2.8 கிராமம் உள்ளது முட்டையின் வெள்ளை கருவில் குளோரின் மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் சல்பர் சிங் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன, அதேபோல் மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி6 போன்ற சத்துக்கள் உள்ளது, மேலும் முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன் துறை போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு ஐந்த சதவீதம் முட்டையில் உள்ளது எலும்பு வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்றி முட்டையில் உள்ளது அதேபோல் தோலுக்கு தேவையான விட்டமின் இ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி திறனுக்கு ஆதாரமாக இரும்புச்சத்து முட்டையில் உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்ற சக்தியை உருவாக்கும் தன்னை முட்டைக்கு உள்ளது, மேலும் இதய நோய் சர்க்கரை நோய் பிரச்சனை அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும் வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு முட்டையின் வெள்ளை கருவை தந்து மஞ்சள் கருவை தரக்கூடாது..!!




