படித்ததில் பிடித்தது: ஏனென்றால் அவள் பெண்..!!

ஏன் அவளை இவ்வளவு வெறுப்பாக பார்க்கிறீர்கள்..

ஏன் அவளை இவ்வளவு கோபித்துக் கொள்கிறீர்கள்…

ஏன் அவள் திமிர் பிடித்தவள் என நச்சரித்து கொள்கிறீர்கள்..

அடங்காப்பிடாரி என முத்திரை குத்துகின்றீர்கள்…

எதிர்த்து எதிர்த்து பேசும் சொல்பேச்சு கேட்காத பெண் என்று எண்ணுகின்றீர்கள்,..

ஏன் அவளை ஆணவம் படைத்தவள் யாருக்கும் அடங்காதவள் என்று எண்ணுகின்றீர்கள்…

 

அவள் கரம் பற்றி ஆர அமர்ந்து

கொஞ்சம் அன்போடு அக்கறையாக

அவளிடம் மனம் விட்டு

பேசிப் பாருங்களேன்…

அவள் அப்படியே தன்னை மறந்து

அத்தனை வலிகளையும் உங்களிடம்

கொட்டி தீர்த்து விடுவாள்…

அப்போது உங்களால் அதை தூக்கி சுமக்க கூட முடியாது…

அப்படியே நொருங்கி போய்விடுவீர்கள்…

 

ஆம் அவள் தான் அத்தனை வலிகளையும் தனக்குள் புதைத்து கொண்டு…

முகத்தில் ஒரு வறட்டு புன்னகையோடு மௌனமாக கடந்து செல்கிறாள்.

அவளின் அந்த புன்னகையில் திமிர் கொஞ்சம் அதிகமாகவே ஒட்டிக் கொள்கிறது…❣️

 

ஏனென்றால்

 

#பெண்_அவள்

Read Previous

காதல் எப்போது எப்படி யார் மேல் வரும் தெரியுமா?..

Read Next

உத்திரபிரதேசம் அருகே இளைஞர் ஒருவர் அடிக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார் செய்து கொண்டார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular