பாகிஸ்தானின் தீவிர நடவடிக்கைகள்..!! போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்..!!

கடந்த சில நாட்களாக அதிகமாக பேசும் பொருளாக இருக்கும் ஒரு விஷயம் தான் பஹல்காம் தாக்குதல் ஆகும். இந்த தாக்குதல் நடந்த பிறகு இந்தியாவும் சரி பாகிஸ்தானும் சரி, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்றுதான் Indus Water Treaty நிறுத்தப்பட்டதாகும். இது மட்டும் இல்லாமல் அரேபியன் கடலில் நமது இந்தியாவின் கப்பல் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் நமக்கு நன்றாகவே தெரியும்.

அடுத்து வரும் சில நாட்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் கூட நடக்கலாம் என்று அனைவராலும் யூகிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவிற்கு துணையாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குரல் கொடுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அமெரிக்க நாடு இந்தியாவிற்கு போர் கருவிகளும் சாட்டிலைட்டுகளும் தருவதாக கூறியுள்ளது.

இந்த வகையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானின் நடவடிக்கைகளும் அதிகரித்துதான் வருகிறது. இந்திய எல்லையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை பாகிஸ்தான் ராணுவம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பதுங்கு குளியல் இருந்து மட்டுமே கண்காணிக்கவும் ராவல் பிண்டியில் இருக்கும் 10 படைப்பிரிவை சார்ந்த வீரர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்திய எல்லை பகுதி மட்டுமல்லாமல் சர்வதேச எல்லைகளான சியால்கோட் குஜ்ரன்வாலா பகுதிகளிலும் வீரர்களை அதிகரித்தே வருகிறது பாகிஸ்தான் ராணுவம். இனி வரும் நாட்களில் பெரும் போர் ஒன்று நடக்கவிருக்கலாம் என்று யூகிக்கப்பட்டு வருகிறது.

Read Previous

இந்த பொரியலை செய்து பாருங்கள்..!! அனைத்து சத்துகளும் நிறைந்த காராமணி காய் பொரியல்..!!

Read Next

12ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்..!! ரூ.71,900/- வரை மாத ஊதியம் பெற வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular