நிலக்கடலையை விரும்பாதோர் யாருமில்லை நிலக்கடலையை வேவித்து சாப்பிடுபவர் உண்டு அதேபோல் நிலக்கடலையை பச்சையாகவும் வறுத்து சாப்பிடுபவர்களும் உண்டு, ஆனால் நிலக்கடலை சாப்பிடுவதனால் உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கிறது அதேபோல் நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்..
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பித்தப்பை கல் மற்றும் குழந்தையின்மை இனப்பெருக்க பிரச்சனை ஏற்படுவதாக பல இடங்களில் கேள்விப்பட்டு வருகிறோம் ஆனால் அவர்களுக்கு சிறந்த தீர்வாக நிலக்கடலை விளங்குகிறது, நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும், அதேபோல் நீர்கட்டிகள் ஏற்படாது மட்டுமல்லாமல் குழந்தை பெறுதலில் தடை இருக்காது, மேலும் தினசரி நிலக்கடலை 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் நிலக்கடலையில் உள்ள புரோட்டீன்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்களை தருகிறது, நிலக்கடலையாக அல்லது நிலக்கடலை சட்னி அல்லது அவித்து சாப்பிடும் பொழுது நேரடியாக உடலை வந்து அடைகிறது..!!




