புளித்தண்ணி தென்மாவட்ட மக்களால் பெரிதும் விரும்பப்படும் எளிமையான குழம்பு வகை ஆகும். இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவது வழக்கம், அதேபோல ரசம் போல புளித்தண்ணி வைப்பது மிகவும் சுலபமானது. இதனுடன் பொட்டுக்கடலை சட்னி, கெட்டியாக அரைக்கப்பட்ட தேங்காய் + காய்ந்த மிளகாய் துவையல் போன்றவை சுவையாக இருக்கும்.
தேவையானவை:
புளி – எலுமிச்சை அளவு,
காய்ந்த மிளகாய் – 5,
கடலை பருப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – சிறிதளவு,
கடுகு, உளுந்து – தாளிக்க தேவையான அளவு,
நல்லெண்ணெய் – சிறிதளவு,
கறிவேப்பில்லை – கையளவு
செய்முறை:
முதலில் புளியை நீரில் நன்கு ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் சிட்டிகையளவு மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டுக்கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் கடாய்யை வைத்து எண்ணெய் ஊத்தி, கடுகு-உளுந்து சேர்த்து, கடலைப்பருப்பு, கறிவேப்பில்லை, மிகளாய் வற்றல் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து சிறிது பொன்னிறமாக விடுங்கள்.
கடலைப்பருப்பு நிறம் மாறிய பிறகு புளித்தண்ணீரை அதில் சேர்த்து, பெருங்காயத்தூளை போட்டு கிளற வேண்டும். நன்கு கொதித்த பின் எண்ணெய் மேலே மிதக்கும் தருவாயில் இதனை இறக்கவும்.அவ்வளவுதான், சுவையான புளித்தண்ணி தயார்.




