காலை எழுந்தவுடன் இவையெல்லாம் செய்தால் அந்த நாளே உங்களுக்கு வெற்றிதான்..!!

நாம் அனைவருக்கும் தினமும் காலையில் சீக்கிரம் எந்திரிக்கும் பழக்கம் இருக்காது. அப்படியே இருந்தாலும் காலை எழுந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாது. காலை ஐந்து மணி அளவில் எந்திரித்து போனை நோண்டுவதனால் எந்த பயனும் கிடைக்க போறது கிடையாது. இதற்கு எந்திரிக்காமலேயே இருக்கலாம். அதனால் இந்த பதிவில் காலை எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக காண்போம்.

எப்போதும் காலை 5 மணி அளவில் எந்திரிக்க வேண்டும். அப்படி எந்திரிப்பது தான் சரியும் கூட. ஆனால் எந்திரித்த பின் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா. பொதுவாக நம் அனைவரின் வாழ்க்கையும் 6 மணிக்கு மேல் தான் தொடங்கும். அதற்கு பதில் ஒரு, ஒரு மணி நேரம் முன்னதாக எந்திரித்து இவையெல்லாம் செய்து வந்தால் உங்கள் நாள் மிகச் சிறப்பாக அமையும்.

காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் நன்றாக தியானம் செய்ய வேண்டும். இந்த தியானம் செய்கின்ற பொழுது அந்த நாள் உங்களுக்கு எப்படி அமைய வேண்டும் என்பதை உங்களுக்குள் நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அடுத்த 20 நிமிடம் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும்.  அந்த புத்தகம் உங்களின் அறிவிற்கு தீனி போடும் வகையில் இருக்க வேண்டும். தின செய்திகளைப் படித்து உங்களின் நேரத்தை வீணடிக்க கூடாது. இதற்குப் பின் அடுத்த 20 நிமிடங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நன்றாக வேர்க்கும் வரை உடற்பயிற்சி செய்தால் உங்கள் நாள் மிக சுறுசுறுப்பாக அமையும்.

இதைதான் ஆங்கிலத்தில் 20/20/20 ஃபார்முலா என்று கூறுவார்கள். இதை எழுத்தாளர் ராபின் சர்மா அவர்கள் தனது 5:00 a.m கிளப் என்னும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இதை கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் நாள் மிக சுறுசுறுப்பாகவும் சிந்தனைக்குரியதாகவும் நிதானமாகவும் அமையும். முதலில் கடினமாக இருந்தால் கூட இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் ஒரு புதிய மனிதனாக உணர்வீர்கள்.

Read Previous

புளித்தண்ணீரை செய்து இருக்கிறீர்களா..!! இந்த செய்முறை தெரிந்தால் தினமும் கூட செய்வீர்கள்..!!

Read Next

குட் பேட் அக்லியன் சிறப்புக் காட்சிகள் ரத்து..!! சோகத்தில் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular