பெண்கள் அணியும் வளையல்கள் ஆல் இவ்வளவு நன்மைகளா..!!

 

வளையல் என்பது பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருள்களில் ஒன்று. ஜோதிடத்திலும் வளையலுக்கு முக்கியத்துவம் உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி வளையல் சுக்கிரனுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால் பல அற்புதமான பலன்களை பெறுவார்கள். அந்தவகையில், வளையல் அணிவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இங்கே நாம் காணலாம்.வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் : வளையல் ஒரு அலங்கார பொருளாக மட்டுமில்லாமல், ஆரோக்கிய ரீதியாகவும் நல்லது. மணிக்கட்டில் வளையல்களை அணியும்போது, அது உராய்வை உருவாக்குகிறது, இது இரத்த ஓட்டம் அதிகரிக்க வழிவகுக்கும். இதனால், உயர் இரத்த அழுத்தத்தின் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக 7வது மாதத்திற்குப் பிறகு வளையல் அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. 7 வது மாதத்திற்குப் பிறகு, குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். கருவில் இருக்கும் குழந்தை வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காணத் தொடங்குகின்றன. இதன் சப்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டும். மேலும், இது மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்துவதால், தாய் சேய் இருவருக்கும் நன்மை பயக்கும்.

வளையல் அணியாத பெண்கள் சோர்வு மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், வளையல்களின் நேர்மறை சக்தி உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கிறது. வளையல்கள் ஒரு பெண்ணின் கணவரின் நல்வாழ்வைக் குறிக்கின்றன. அது மட்டுமல்ல. வளையல் அணிவது தம்பதியிடையே உறவை வலுப்படுத்த உதவுகிறதுஜோதிட ரீதியாக ஆடம்பர மற்றும் அழகை குறிக்கக்கூடிய கிரகமான சுக்கிரனுடன் வளையல் தொடர்புடையது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிர கிரகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் வளையல் அணிவது நன்மை தரும். இது கிரகத்தை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.
சில நிறங்களை அணிவது பெண்களுக்கு நன்மை பயக்கும். சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் மிகவும் மங்களகரமான வண்ணங்களாகக் கருதப்படுகின்றன. சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்கள் நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் தருகின்றன.

Read Previous

மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களுக்கான சிறந்த தீர்வு அளிக்கும் பழச்சாறு..!!

Read Next

பப்பாளி செய்யும் மாயம்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular