நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் முக்கியமாக பார்க்கப்படுவது தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிச்சயமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெண்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும் என்று இந்த பதிவில் மிகத் தெளிவாக காண்போம்.
பெண்கள் வாழைப்பழத்தை சாப்பிடும் போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் கனிம சத்துக்கள் பொட்டாசியம் கால்சியம் நார்சத்து இரும்பு சத்து மிக சுலபமாகவே கிடைக்கும். வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து உடலின் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் பசி உணர்வை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கும். உடலில் இருக்கும் ரத்த அளவு சீராகி நன்மை தரும். அதுவும் இல்லாமல் பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு அவர்களுக்கு நிச்சயமாக குறையும்.
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் உடல் சோர்வு கட்டுப்படுத்தவும் இந்த வாழைப்பழம் உதவுகிறது. பெண்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதில் இந்த வாழைப்பழம் சரியான தீர்வாக இருக்கிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மெக்னீசியம் சரும நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவும். குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் இந்த வாழைப்பழம் மிகவும் உதவுகிறது.




