
பெண்ணை அடித்தே கொன்ற கள்ளக்காதலன்..!! மூட்டையில் கிடைத்த பிணம்..!!
புதுவை: வடுவக்குப்பத்தில் கணவனை பிரிந்து வாழும் இளவரசி (38) 8 வருடமாக ராஜூ என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், திருவக்கரையில் உள்ள முட்புதரில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில், இளவரசி பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, போலீஸார் ராஜூவிடம் விசாரணை மேற்கொண்டதில், சாப்பாடு செய்யாததால் இளவரசியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை ராஜூ அடித்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி முட்புதரில் வீசியது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.