• September 11, 2024

மக்களின் உயிரோடு விளையாடாதீங்க மு க ஸ்டாலின்..!! எச்சரிக்கும் இபிஎஸ்..!!

சென்னையில் உள்ள அடையாறு எல்பி சாலையில் மாநகர பேருந்து எரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சமயோஜிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரசு பேருந்துகளில் நம்பி பயணம் செய்யும் பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று தமிழக அரசிற்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவரின் செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பது “விடியா திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாதது குறித்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்கும் பழுதடைந்த பேருந்துகள் குறித்தும் தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வருகிறேன். எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இது போன்ற மக்களின் உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்பட காரணமாய் அமையும் இந்த வீடியோ திமுக அரசு செயல்படும் இந்த விடியோ திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அரசு பேருந்துகளில் நம்பி பயணம் செய்யும் பொது மக்களின் உயிரோடு விளையாடாமல் பயன்பாட்டில் உள்ள பேருந்துகளுக்கு தர ஆய்வு நடத்தையும், புதிய பேருந்துகளை இனியாவது கொள்முதல் செய்தும் பாதுகாப்பான பயணத்தை மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும்  என  விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்”, என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Read Previous

செங்காலை வைத்திருந்த மன்னன் தனது அந்தப்புரத்தில் எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று தெரியுமா..? வெடித்தது சர்ச்சை..!!

Read Next

தமிழக மக்களே உஷார் பானிபூறியில் புற்றுநோய் நிறமி..!! உணவுத்துறை ஆணையர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular