
பிரபல சீரியல் நடிகையான ஆர்த்தி சுபாஷ் புடவையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் YouTube வெப் சீரியஸ்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். அதன் பிறகு ஆதித்யா தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக பணியாற்றி வந்தார்.
பின்னர் இவருக்கு சன் தொலைக்காட்சியில் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
ரசிகர்களுக்கு இவரின் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கின்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார்.
தொடர்ந்து சின்ன திரையில் பிஸியாக இருந்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
தினம் தோறும் தான் எடுக்கக்கூடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். சமீப நாட்களாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வந்த இவர் தற்போது மங்களகரமாக புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ…
View this post on Instagram