மதச்சாயம் பூச வேண்டாம் என்று அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார்…
தமிழகத்தில் ஆங்காங்கே புத்தகத் திருவிழா நடந்து வந்து கொண்டிருப்பதை தொடர்ந்து மதுரையில் நடந்த புத்தக திருவிழாவில் மாணவிகள் சாமியாடிய விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது, புத்தகத் திருவிழாவில் மாணவிகள் சாமியாரின் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார், புத்தகத் திருவிழாவில் நடந்த முழுக்க முழுக்க கிராம கலை நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்பட்டது மதச்சாரமும் ஜாதி சாயமோ பூச வேண்டாம் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார், மேலும் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தையும் புத்தகம் எழுதும் பழக்கத்தை உருவாக்குவதற்காகவே ஆங்காங்கே புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது அதனை தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம் என்றும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார், மேலும் தவறான வதந்திகளை சமூக வலைதளங்கள் பரப்ப வேண்டாம் என்றும் அதற்கு வண்ண சாயங்கள் அடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்..!!