நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கான வழிகாட்டல் முறை தட்டுப்பாடல் நிலையில் இருக்கிறது, என்றும் இதற்கு மத்திய அரசு காரணம் என்றும் மத்திய அரசின் மீது காட்டம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை திணிப்பின் காரணமாக தமிழகம் அதை ஏற்க மறுப்பதன் மூலம் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதியை வழங்காமல் இலக்குகளையும் சிறப்பாக செயல்படுத்தாத மாநிலங்களுக்கும் தேவையான நிதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது ஆனால் தமிழகம் சிறப்பான முறையில் தனது கொள்கைகளை நிறைவேற்றி வருகின்ற பட்சத்தில் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு தராமல் இழுத்தடிப்பதற்கு காரணம் என்ன என்றும், சமமான தரமான கல்வி வழங்க வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு இதுதானா இனிமேல் மத்திய அரசை பற்றி மக்களை முடிவெடுக்கட்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்…!!




