தற்பொழுது உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறுகின்ற காலத்தில் யுபிஐ ஐடி மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து வருகின்றோம் பணத்தை பெறுவது மட்டுமல்லாமல் பணத்தை இருந்த இடத்திலிருந்து அனுப்பும் அளவிற்கு டிஜிட்டல் மயமாக உலகம் மாறி இருக்கிறது, மேலும் upi மூலம் பணத்தை செலுத்தும் போது இதனை தவறாமல் கவனிக்க வேண்டும்..
யுபிஐ மூலம் பணத்தை செலுத்தும் போது தவறாமல் சில விஷயங்களை கவனிக்க வேண்டும், யுபிஐ பின் நம்பரை யாரிடம் பகிரக்கூடாது அல்லது மற்றவர்கள் பார்வை படும்படி பணத்தை மாற்றக்கூடாது, நாள் பண மோசடி பிரச்சனைகளில் நாம் சிக்க நேரிடும், யுபியை செயலியை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை புதுப்பித்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும், மேலும் பணம் செலுத்துவதற்கு முன்பு யு பி ஐ டி யின் பெயர் வங்கியின் கணக்கு எண் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே பணத்தை அனுப்ப வேண்டும், சிறிய கவனக்குறைவும் பண மோசடி விவகாரத்தில் சிக்க நேரிடும்..!!




