மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களம் காணும் சச்சின்..!! வெளியான முக்கிய அப்டேட்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த வருட இறுதியில் நடைபெறும் ’International Masters League’ தொடரில் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார்.
T20 பார்மட்டில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, இலங்கை அணிகளின் ஜாம்பவான்கள் மீண்டும் களம் இறங்க உள்ளனர். பல தகர்க்க முடியாத கிரிக்கெட் சாதனைகளை செய்து சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று சுமார் 10 ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் இன்னும் சச்சின் டெண்டுல்கரை மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.