முக ஸ்டாலின் முதல் சிபிராஜ் வரை..!! களைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் வரவேற்பு..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார். அது மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கின்றார்.

சர்கார் திரைப்படத்திலும் சண்டக்கோழி 2 திரைப்படத்திலும் இவர் வில்லியாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்குலும் கவனம் செலுத்தி வரும். இவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மைக்கேல் ,வீரசிம்ஹா ரெட்டி, ஹனுமன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. இந்த சூழலில் நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி மும்பை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சர்ச்தேவ் என்பருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று தாய்லாந்தில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் ரிசப்சன் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வரும் நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள் அதை தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்களும் தொடர்ந்து இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Read Previous

கர்ப்ப காலத்தில் உள்ளாடை அணியலாமா?.. பெண்கள் கண்டிப்பாக இத தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

சூர்யா 44 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல், உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular