
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஆன புளூம்பெர்க் நிறுவன அதிபர் மைக்கேல் புளூம்பெர்க் 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.32,184 கோடியை நன்கொடை அளித்துள்ளார். கல்வி, கலை, பொது சுகாதாரம் தொடர்பான அறக்கட்டளைகளுக்கு அவர் இத்தொகையை தானமாக அளித்துள்ளார். இதன் மூலம் அந்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிக அதிக தொகையை தானம் அளித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.