வாழ்க்கைக்கு தேவையான 10 விஷயங்கள்!!!
1.யாரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது. பெரும்பாலான மக்கள் நம்மை பயன்படுத்திக்கொள்ளவே நினைப்பார்கள். அன்பு அன்பு என்று நம்மை நாம் இழந்துவிடக்கூடாது.
2.சேமிப்பு மிக அவசியம். சேமித்த பணத்தைக் கொண்டு கொஞ்சம் தங்க நகைகளை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. துன்பம் வரும் போது யாரிடமும் கைநீட்டி நிற்க வேண்டிய சூழ்நிலை வராது.
3.எல்லா நேரமும் உண்மையே பேசவேண்டும் என்றில்லை. சில நேரங்களில் இடத்திற்கு ஏற்ற மாதிரி Diplomatic ஆகவும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
4.சமுதாயம் விதிக்கும் நம் மனதுக்குப் பொருத்தமற்ற விதிகளுக்குக் கட்டுப்படக் கூடாது. அதாவது ஊர் என்ன நினைக்குமோ என்று எண்ணி தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது.
5.எளியோருக்கு மனமுவந்து உதவலாம். ஆனால் அவன் கேட்கிறான் இவன் கேட்கிறான் என்று எல்லாருக்கும் கடன் கொடுத்து பழகிவிடக்கூடாது. மீண்டும் நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.
6.வாழ்க்கையில் நாம் வெற்றி பெற்றால் அதை எல்லாருக்கும் சொல்ல வேண்டாம். ஏனென்றால் நம் வெற்றியை எல்லாருமே மகிழ்ச்சியாகப் பார்ப்பது இல்லை.
7.நம் குடும்பம் – நமக்கு எப்போதும் உறுதுணையாய் இருப்பவர்கள். அவர்களை எப்போதும் அன்புடன் ஆதரிக்க வேண்டும்.
8.துன்ப நேரத்திலும் நம்முடன் இருந்த நட்புகளை ஒருபோதும் விட்டு விலகிவிடக் கூடாது.
9.வேலை நேரத்தில் வேலை செய்தாலும், மற்ற நேரங்களில் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். அதாவது Work-Life Balance மிகவும் முக்கியம்.
10.கவலைப்படுவதன் மூலம் கடுகளவும் நம் பிரச்சனை தீராது. கவலை, விரக்தி ஏற்படும் வேளைகளில் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நம் மூச்சுக்காற்றைக் கவனிக்க வேண்டும். சில நிமிடங்களில் நம் மனது அமைதியாகும். பிறகு, பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
மேலே கூறிய விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் அடிபட்ட பிறகு உங்களுக்கு புரியும்.




