• September 11, 2024

விருப்பமில்லாமல் விலகிச் செல்பவர்களை காரணம் கேட்டு கஷ்டப்படுத்தாதீர்கள்..!!

யாரையும் “காயப்படுத்தாதீர்கள்”….!

நீங்கள் உண்மையிலேயே யார் என்று புரிந்துகொள்ளாத ஒருவரைப் பிடித்துக் கொண்டிருப்பதை விட, சில நேரங்களில் அவர்களை கைவிட்டு முன்னே செல்வது நல்லது. நீங்கள் அவர்களுடன் இல்லாததன் வலியை அவர்கள் உணரும் நேரம் கண்டிப்பாக வரும். உங்கள் முக்கியத்துவம் ஒருநாள் கண்டிப்பாக புரியும்.

 

உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்யாத முடியாத, மதிப்பில்லாத அந்த உறவை நினைத்து, நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்

 

உங்கள் மீது அக்கறை கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

 

உங்களுக்கு உண்மையாக இருக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

 

உங்களுக்குத் பிடித்த நபராக இருக்க, நீங்கள் ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியாது, அவர்களாக இருக்க வேண்டும்.

 

உண்மை என்னவென்றால், சில சமயங்களில் நீங்கள் மிகவும் விரும்பும் நபர் உங்களுடன் இல்லாமல் போனாலே, நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள்.

 

உங்கள் வாழ்க்கையில் வரும் விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நினைப்பதை நிறுத்துங்கள். சில விஷயங்கள் தோல்விகளை கொடுக்கும். சில பாடங்களை கொடுக்கும். சில வருத்தங்களை கொடுக்கும். சில போராட்டங்களை கொடுக்கும். அனைத்தும் கலந்ததே வாழ்க்கை.

 

அன்பை காட்ட நீங்கள் செய்யும் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் ஒன்றை இழந்து ஒன்றை பெற முயற்சிக்காதீர்கள்.

 

நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் அன்பை, திருப்பி செலுத்த தயாராக இல்லாத ஒருவரிடமிருந்து உங்களுக்குத் தேவையான உறவைப் பெற முடியாது.

 

நீங்கள் ஒருவரைச் சந்தித்து அவர்களால் காயமுற்று, அவர் உங்களுக்கானவர் இவர் இல்லை என உணரும் போது அது கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

 

இரவில் தூங்குவதற்கு முன் நீங்கள் எத்தனை இரவுகள் அழுதாலும், இறுதியில் ஒருநாள் உங்கள் முந்தைய உறவிலிருந்து விடுபடுவீர்கள், மேலும் அடுத்து உங்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக கண்டுபிடிப்பீர்கள். உங்கள் முந்தைய உறவில் விஷயங்கள் ஏன் கைகூடவில்லை என்பதை உங்கள் எதிர்காலம் உங்களுக்கு புரிய வைக்கும்.

 

நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், “தரமில்லாத உறவில் இருப்பதை விட தனிமையில் இருப்பது நல்லது.”

 

அவர்கள் உங்களை, அவர்களுக்கான ஒரு விருப்பப் பொருளாக மட்டுமே பார்த்தால், அவர்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை பெறத் தகுதியற்றவர்கள்.

 

புரிந்துகொள்ளுங்கள், உங்களை பின்தொடராத ஒருவரை, ஒருபோதும் நீங்கள் பின்தொடர வேண்டாம்…✍🏼

 

உண்மையாகவே உங்களை நேசித்து இருந்தால் உங்கள் கண்ணில் கண்ணீரை வர விட மாட்டார்கள்….

 

உங்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போவார்கள் தவித்துப் போவார்கள் தேடி ஓடி வருவார்கள்…

 

நீங்கள் வேண்டவே வேண்டாம் என்று விட்டுவிட்டுச் செல்லும் போதே தெரிந்து கொள்ளுங்கள் அங்கே வேறு ஏதோ புது உறவு வந்துவிட்டது அதனால் பழைய உறவு கசந்து விட்டது..

 

விருப்பமில்லாமல் விலகிச் செல்பவர்களை காரணம் கேட்டு கஷ்டப்படுத்தாதீர்கள்…

 

இதயம் கடந்து செல்வோம் இதுவும் கடந்து போகும்….

Read Previous

மாப்பிள்ளை சம்பா அரிசியில் பயன்கள்..!!

Read Next

இவ்வுலகில் பிறந்த அனைவருமே பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular