தமிழக அரசு கீழ் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் புதிய சட்டம் அமலுக்கு வர இருக்கிறதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது..
அதில் டாஸ்மாக் கடைகளில் இனி வரும் காலங்களில் மது பாட்டில்கள் வாங்கும் போது அதற்கான ரசீது வழங்கப்பட இருக்கிறது என்றும் அறிவித்துள்ளது, மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு இந்த திட்டமானது அமலுக்கு வரும் என்றும் இதனால் குடிமகன்கள் தங்களை ரசீதுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது, டாஸ்மாக் கடைகளில் பணி புரியும் ஊழியர்கள் மது பாட்டில்களுக்கு அதிக விலை வைத்து விற்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இதனை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது என்றும் தெரியவந்துள்ளது இதன் மூலமாக மது பிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நடக்காமல் சுமூகமான முறையில் மது பாட்டில்கள் விற்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பார்கோடு மூலம் அல்லது ஸ்கேன் மூலம் விலை பட்டியலை தெரிந்து கொண்டு அதற்கான பணத்தை செலுத்தி மது பாட்டில்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது..!!