நமது உடலை தினமும் சுத்தம் செய்வதே நாம் வழக்கமாக வைத்திருப்போம். அதுதான் நல்லதும் கூட என்று பிறருக்கு சொல்லியும் கொடுப்போம். ஆனால் நமது உடலில் இருக்கும் ஒரு சில பாகங்களை சுத்தம் செய்தால் பல பிரச்சனைகள் வரக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அது என்னவென்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
நாம் தினமும் இரண்டு முறை குளித்து நமது உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதேபோல நமது உடலில் இருக்கும் சில பாகங்களை குறைவாக சுத்தம் செய்தால் அந்தப் பகுதியில் ஆரோக்கியம் மேம்படுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் நமது முகத்தை கழுவ கூடாது. அப்படி செய்தால் நமது முகத்தில் உருவாகும் இயற்கை எண்ணெய் அளிக்கப்படும்.
இதனால் நமது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற முடியாமல் பருக்கள் உருவாகுகிறது. காதுகள் மெழுகு போன்ற பதத்தை கொண்டுள்ளது. இது தூசு மற்றும் மாசுகளை சுத்தம் செய்ய மிகவும் உதவும். ஆகையால் எப்போதும் பருத்திவீரல் மற்றும் விரல்கள் கொண்ட காதை சுத்தம் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் குளிக்கும் போது எப்போதும் ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது.
அப்படி செய்தால் தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய் அழித்து தலைமுடிக்கு வறட்சி கொடுக்கும். நமது மூக்கை அடிக்கடி சுத்தம் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். ஒரு விரலால் நமது மூக்கை சுத்தம் செய்கின்ற பொழுது மூக்கில் கீறல்கள் உருவாகி கிருமித் தொற்றுக்கு வழிவகிக்கிறது. இதை நாம் கடைப்பிடித்து வந்தால் நமது உடல் பாகங்களின் ஆரோக்கியம் நிச்சயமாக மேம்படும்.



