அனுபவம் தத்துவம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

_*அனுபவம் தத்துவம்*_
கோபத்தை அடக்கி
சமாதானத்திற்கு
முயலும்பொழுது
அம்மா பேரழகி🫰

பிடித்தால் மட்டும் ஒரு
உறவை தக்க
வைத்துக்கொள்ள
முடியாது
பிடித்தலுடன் புரிதலும்
வேண்டும் உன்னைப்போல்

அடக்குபவர் முன்
சுதந்திரமாய் இரு…
சுதந்திரம் கொடுப்பவர் முன்
அடங்கி இரு..

கோவத்தை அடக்க
நான் பழகிவில்லை
கோவப்பட்டாலும்
என்னை விட்டு
விலகாமல் இருக்க
என்னை புரிந்து
வைத்திருக்கிறார்கள்!!!

அனுபவத்தை எந்த ஆசிரியராலும் நமக்கு கற்றுத் தர முடியாது. அனுபவித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாம் சரியாய்
இருப்பதாய்,

எல்லாம் இயல்பாய்
நடப்பதாய்…

மற்றெல்லோரையும்
எளிதாக
நம்ப வைத்து விடுகிறோம்!

சரியான நபர்களை விட
தனக்கு சாதகமான நபர்களையே
அதிகம் விரும்பும் இந்த உலகம்…! ✍️

#குறள்617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

#உரை617
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

உன் வலியைச் சொல்லாமல் நீ மௌனமாய் இருந்தாயானால், அவர்கள் உன்னைக் கொன்றுவிட்டு… உன் மரணத்தை நீதான் விரும்பினாய் என்று கூறி விடுவார்கள்.!

ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பிவிட நினைக்கலாம்…!!!

ஆனால்….

ஒருசில இடங்களை வேறொருவரால் நினைவுபடுத்த முடியுமே தவிர…..
நிரப்ப முடியாது…!!!
தனக்கு கஷ்டம் வந்தா.. நல்லவங்கள ஆண்டவன் ஏன் தான் இப்படி சோதிக்கிரானோன்னு அழுவுறான்….

அதே மத்தவனுக்கு வந்தா செஞ்ச பாவத்துக்கு தண்டணைன்னு சிரிக்கிறான்…

Read Previous

இறுதி மூச்சு வரை ஓய்வின்றி உழைக்கும் அம்மாக்களுக்காக..!! அருமையான பதிவு..!! படித்ததில் வலித்தது..!!

Read Next

எந்த சைஸ் டிவியை எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular