கர்நாடகா: யுனிஸ் பாஷா (33) என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த 2021இல் திருமணமான நிலையில் மனைவிக்கு 2 முறை அவர் கருக்கலைப்பு செய்தார். பாஷாவும், அவரது பெற்றோரும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தினர். மாமனாருக்கு மசாஜ் செய்யவும் வற்புறுத்தப்பட்டது. மனைவியை அரசியல் பிரமுகர்கள், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்திய பாஷா அதற்கு அவர் மறுத்ததால் தலாக் கூறினார். இதுகுறித்த புகாரில் பாஷா மற்றும் அவர் பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.




