அருண் விஜயுடன் மீண்டும் இணையும் தனுஷ்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

மான் கராத்தே படத்தின் இயக்குனரான திருக்குமரனின் இயக்கத்திலும் அருண் விஜய் நடிப்பிலும் உருவாகி வரும் படம் தான் ரெட்ட தல. இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்யானி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அருண் விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நேரத்தில் இப்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் அவர்கள் பாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் தனுசு ரசிகர்களும் அருண் விஜய் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் தனுஷின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இட்லி கடை படத்தை பற்றி நம் அனைவருக்கும் தெரியும்.

இந்தத் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அக்டோபர் மாதம் வெளியாகும் என்ற செய்தி வந்தது. அதனால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர்.

Read Previous

‘தாய் பாசம்’.. படிக்கும்போதே கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கெட்ட கொழுப்புகள் கடகடவென குறையனுமா?.. இந்த உணவுகள் சாப்பிட்டாலே போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular