அவுல் பாயாசம் செய்வது எப்படி..??

Oplus_131072

 

தேவையான பொருட்கள்

சிகப்பு அவல் – 1 கப்,
தேங்காய் பால் – 3 கப்,
நாட்டு சர்க்கரை – 1/4 கப்
முந்திரி – 10
திராட்சை -5
வாழைப்பழம் – 3
ஏலக்காய் பொடி – 2 பின்ச்

 

செய்முறை

இந்த பாயாசம் செய்வதற்கு முன்பு அவலை ஒரு முறை தண்ணீர் ஊற்றி அலசி விடுங்கள். அதன் பிறகு இந்த அவல் முழுவதும் முழங்கும் வரை தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் வரை நன்றாக ஊற விடுங்கள். நன்றாக உரிய அவலில் செய்யும் போது தான் பாயாசம் ருசியாக இருக்கும். அவல் ஊறவில்லை என்றால் பாயாசம் சாப்பிடும் போது அவல் முழுதாக இருந்தால் சாப்பிட நன்றாக இருக்காது.

இப்போது ஒரு முழு தேங்காயை சிறிய துண்டுகளாக மிக்ஸியில் போட்டு அரைத்து மூன்று கப் வரும் அளவு தேங்காய் பால் தயார் செய்து கொள்ளுங்கள். முதலில் அரைக்கும் போது தண்ணீரை கொஞ்சம் அதிகமாக ஊற்றியும் இரண்டாவது முறை அரைக்கும் போது தண்ணீரை கம்மியாக ஊற்றியும் அரைத்தால் தேங்காய்ப் பால் தாராளமாக கிடைக்கும்.

இரண்டு மணி நேரம் கழித்து ஊற வைத்த அவலை முதலில் நன்றாக கரண்டி வைத்து மசித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்றாக கை அல்லது கரண்டி வைத்து மசித்து விடுங்கள். இவை எல்லாம் சேர்த்து பஞ்சாமிர்தம் போல குழைந்து வர வேண்டும்.

இப்படி குழைத்த இந்த அவலை நாம் எடுத்து வைத்த தேங்காய் பாலில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு முந்திரி திராட்சை சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து விடுங்கள். இனிப்பு போதவில்லை என்றால் நாட்டு சர்க்கரையை இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான அவல் பாயாசம் தயார்.

Read Previous

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உண்டா..?? பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன..??

Read Next

ஹோட்டலில் கொடுக்குற அதே கருப்பு சிக்கன் சால்னா வீட்டிலேயே செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular