Oplus_131072
ஒரு கடாயில்
ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
ஒரு துண்டு பட்டை ,
ரெண்டு கிராம்பு ,
ரெண்டு ஏலாக்காய் ,
ஒரு சின்ன மராட்டிமொக்கு ,
ஒரு ஸ்பூன் மிளகு ,
அரை ஸ்பூன் சீரகம் சோம்பு ,
ஒரு ஸ்பூன் முழு மல்லி
6 காஞ்சமிளகாய் ,
5 ஸ்பூன் துருவுனா தேங்காய் ,
5 முந்திரி சேர்த்து நல்லா ரோஸ்ட் ஆகுற வரைக்கும் வறுத்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி
ஒரு பிரிஞ்சியிலை ,
அரைஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன்
ஒரு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பிறகு இஞ்சிபூண்டு விழுது ஒரு ஸ்பூன் சேர்த்து ரெண்டு பழுத்த தக்காளி , ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் மல்லி தூள் , உப்பு சேர்த்து நல்ல வதக்கிய பிறகு
எலும்புடன் கூடிய கோழி அரைகிலோ சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பிறவு அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து ரெண்டு டம்பளர் தண்ணீர் ஊற்றி ரெண்டு விசில் வைத்து எடுத்தால் நல்ல வாசனையோடு கோழி சால்னா ரெடி ..



