ஆதார் கார்டு புதுப்பிப்பதில் சில மாற்றங்கள்..!! உடனே இத தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. அத்தகைய ஆதார் கார்டின் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் விதமாக அண்மையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) ஆதார் கார்டில் சில புதிய விதிகள் மற்றும் அப்டேட்டுகளை கொண்டு வந்துள்ளது. அதை பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, ஆதார் வைத்திருக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், அத்தகைய ஆதார் எண்ணை வைத்திருப்பவர்களின் வசதிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதார் ஆணையம் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி, அதை மக்கள் இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 14, 2024 வரை கால அவகாசத்தை நீட்டித்தது. மேலும், இந்தப் புதிய படிவங்கள் ஆதாரில் திருத்தம் செய்வது மற்றும் புதிய ஆதார் கார்டு பெறுவது தொடர்பான செயல்முறையை மிகவும் எளிமையாக்கும் என்று ஆதார் ஆணையம் கருதுகிறது.

Read Previous

இரவில் படுத்த உடனே தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்..!!

Read Next

காணாமல் போன 7 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular