பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை என விமானப்படை அறிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் தாக்குதல் & பதிலடி சம்பவங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், “விமானப்படை விவேகத்துடன், சிறப்பாக செயல்பட்டு தனது தாக்குதலை முடித்து இருக்கிறது. ஆனால், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர வேண்டாம்” என X பக்கத்தில் தெரிவித்துள்ளது.



