ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பொதுவாக குறிப்பிட்ட சில தாவரங்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும். இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

 

இதன்படி, சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூவில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

அந்த வகையில், ஆவார பூவில் இருக்கும் மருத்துவ பலன்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஆவாரம் பூவின் பலன்கள்

தாபா ஸ்டைலில் வீட்டில் உருளைக்கிழங்கு காலிபிளவர் கறி செய்வது எப்படி?.. செய்முறை உள்ளே..!!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் தான் ஆவாரம் பூ அதிகமாக மலர்கின்றன.

 

அதிலும் குறிப்பாக மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் வெப்பத்தினால் உருவாகும் நோய்களுக்கு ஆவாரம் பூ மருந்தாக பயன்படுத்துகிறது.

உதாரணமாக அம்மை நோய், உடல் சூட்டினால் வரும் நோய்கள் மற்றும் சர்க்கரை வியாதி ஆகியவற்றை கூறலாம்.

ஆவாரம் பூ தண்ணீர்

காய்ந்து போன ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் குடிக்கலாம். இது உடலில் புதியதொரு மாற்றத்தை கொண்டு வரும்.

 

இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து நோயின் தாக்கத்தை கட்டுக்குள் வைக்கும் வேலையை செய்கிறது.

அத்துடன் சரும நோய்கள், சிறுநீரக தொற்று போன்றவற்றையும் ஆவாரம் பூ குறைக்கும் என மருத்துவர் கூறுகிறார்.

அதே போன்று, 5 ஆவாரம் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டியும் குடிக்கலாம்.

Read Previous

20 ஆண்டுகளுப்பிறகு ஜாகீர்கானுக்கு மீண்டும் ‘ப்ரப்போஸ்’ செய்த ரசிகை..!! வைரல் வீடியோ..!!

Read Next

‘இல்லத்தரசி’ என்பது சும்மா வெறும் வார்த்தை அல்ல..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular